நீங்கள் எனது மனைவி இல்லை – கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்!

22360 0

வடக்கு மாகாணசபையில் சம்பந்தமில்லாது நந்தவனத்தில் ஓர் ஆண்டி என……. பாடல்கள் பாடுவதும்கதைககள் சொல்வதும் சில உறுப்பினர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விடயம்.
தங்களை ஏன் உறுப்பினர்களாக மக்கள் தேந்தெடுத்து மாகாணசபைக்கு அனுப்பினார்கள் என்பது கூடத் தெரியாது நான்கு வருடங்களை கதைசொல்லியும் பாட்டுப் பாடியுமே சிலர் காலத்தைக் கழித்துவிட்டனர்.

அவ்வகையில் இன்று நடைபெற்ற சபை அமர்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் சபைக்குச் சம்பந்தமில்லாது கதைசொல்லி தானே சிரித்துக்கொண்டார்.

அவர் சொன்ன கதை இதுததான்,

ஒருவர் தொடர்ச்சியாக தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருப்பாராம். அதனால் பயமடைந்த அவரது மனைவி ஒரு மனநல மருத்துவரிடம் தனது கணவரை அழைத்துச் சென்றாராம். அதனைக் கேள்வியுற்ற மருத்துவர் எதற்கு என்னிடம் அழைத்துவந்தீர்கள் தொலைக்காட்சியின் ஆளியை நிறுத்துங்கள் அவர் தொலைக்காட்சி பார்க்கமாட்டார் என்றாராம். அதற்கு அந்தப் பெண்மணி கூறினாராம் தொலைக்காட்சியின் ஆளியை நிறுத்தியும் அவர் ரோச்லைற் அடித்து தொலைக்காட்சி பார்க்கிறார்.

இவ்வாறுதான் இங்கு சிலர் அலைந்து திரிகிறனர் என்றார்.

அவ்வாறு கதைகூறி முடித்து உறுப்பினர் சயந்தன் தானே சிரித்துக்கொண்டபோது எதிர்க்கட்சி உறுப்பிர் ஒருவர் அதற்கு பதிலளிக்க முனைந்தபோது நீங்கள் எனது மனைவியில்லை பேசாமல் உட்காருங்கள் என்றார்.

Leave a comment