பொலிஸ் பரிசோதகருக்கு பிடியாணை

219 0

ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியும் தற்போதைய காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சுகத் என்பவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவார்த்து குற்றச்செயல் ஒன்று தொடர்பான வழக்கு நேற்று (25/07/2018) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதலாவது சாட்சியான குறித்த பொலிஸ் பரிசோதகர் சுகத் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்திற்காகவே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கின் சந்தேகநபரும் மன்றில் பிரசன்னமாகி இருக்காத காரணத்தினால் சந்தேநபருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment