சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை எடுத்து வந்த இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் மூவரும் சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பாதங்களில் ஒட்டப்பட்டிருந்த 6 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் 29 மில்லியன் பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 5 கிலோவிற்கும் அதிகமான தங்கத்துடன் கைது செய்யப்பட்ட டுபாயில் இருந்து இலங்கை பெண் ஒருவருக்கு 25 இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து மூன்று கோடியே 6 இலட்சத்து 93 ஆயிரம் பெறுமதியான தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டிருந்தது.
வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுன் குறித்த தங்க கட்டிகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

