வௌிநாடு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

197 0

பட்டப்பின் படிப்பிற்காக வௌிநாடுகளுக்கு சென்ற பல்கலைக்கலகங்களின் விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் மீண்டும் நாட்டுக்கு திரும்பவில்லை என உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பட்டப்பின் படிப்பிற்காக ஒரு ​பேராசியருக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிடுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர பட்டப்பின் படிப்பு காலத்தில் சம்பளமும் வழங்கப்படுவதால் அந்த பேராசிரியர்கள் மீண்டும் நாடு திரும்பாத காரணத்தால் ஆண்டொன்றுக்கு அரசாங்கத்துக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பட்டப்பின் படிப்பு நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பாத பேராசிரியர்களிடம் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிணையாளர்களிடமாவது அந்தப் பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment