செம்­மணி எலும்­பின் ஆய்­வுக்கு பன்­னாட்டு நிபு­ணர்­கள் வேண்­டும்! – மாவை

469 0

செம்­ம­ணி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மனித எலும்­புக்­கூட்டை அகழ்ந்­தெ­டுக்­கும் பணி­க­ளி­லும் எலும்­பு­க­ளைப் பகுப்­பாய்வு செய்­யும் பணி­க­ளி­லும் பன்­னாட்டு நிபு­ணர்­கள் குழுவை அனு­ம­திக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை. சோ.சேனா­தி­ராசா.

‘‘இலங்கை இரா­ணு­வத்­தால் இழைக்­கப்­பட்ட போர்க் குற்­றங்­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்கு, அவற்றை ஆதா­ரத்­து­டன் உலக நாடு­கள் அறி­வ­தற்கு தற்­போது வடக்கு மாகா­ணத்­தில் மீட்­கப்­ப­டும் மனித எலும்­புக் கூடு­க­ளும் ஒரு சாட்சி. எனவே அவற்­றைப் பகுப்­பாய்வு செய்து போர்க்­குற்­றத்தை நிரூ­பிக்க பன்­னாட்டு நிபு­ணர் குழுவை அரசு அனு­ம­திக்க வேண்­டும்’’ என்­றார் அவர்.

யாழ்ப்­பா­ணம் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தின் முடி­வில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டம் பேசிய போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தின் நுழை­வா­யி­லான செம்­ம­ணி­யில் கடந்த சில நாள்­க­ளுக்கு முன்­ன­தாக நிலத்­தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த மனித எலும்­புக்­கூடு கண்­ட­றி­யப்­பட்­டது. தண்­ணீர்த் தாங்கி அமைப்­ப­தற்­காக அங்கு குழி தோண்­டி­ய­போது இந்த எலும்­புக்­கூடு கண்­ட­றி­யப்­பட்­டது.

வடக்கு மாக­னத்­தின் பல பிர­தே­சங்­க­ளி­லும் அண்­மைய நாள்­க­ளாக மனித எலும்­புக் கூடு­கள் மீட்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நாட்­டில் எந்­த­ள­வுக்கு மனி­தப் படு­கொலை இடம்­பெற்­றுள்­ளது என்ற உண்­மை­கள் இப்­போது மெல்­ல­மெல்ல வெளி­வ­ரத் தொடக்கி விட்­டன.

எனவே அரசு இந்த விட­யத்­தில் நேர்­மை­யா­கச் செயற்­பட வேண்­டும். அதற்கு இங்கு உட­ன­டி­யாக வெளி­நாட்டு நிபு­ணர் குழு­வைப் பகுப்­பாய்­வுக்­காக அனு­ம­திக்க வேண்­டும். போரின்­போ­தும் அதற்கு முன்­னைய காலத்­தி­லும் எத்­த­னையோ தமி­ழர்­கள் காணா­மல் ஆக்­கப்­ப­டுள்­ள­னர், கைது செய்­யப்­பட்டு காண­மல் போயுள்­ள­னர்.

அவ்­வா­றா­ன­வர்­க­ளும் இறந்­தி­ருக்­க­லாம் எனக் கூற­பட்­டு­வ­ரும் நிலை­யில் மீட்­கப்­ப­டும் மனித எலும்­புக் கூடு­கள் யாரு­டை­யது என்­பது துல்­லி­ய­மா­கக் கண்­ட­றி­யப்­பட வேண்­டும். அத்­து­டன் இந்த எலும்­புக் கூடு­கள் மீட்­கப்­ப­டு­வ­தை­யும் அது யாரு­டை­யது என்­ப­தை­யும் நாமும் உல­க­மும் அறிய வேண்­டும். இலங்­கை­யில் போர்க் குற்­றம் நடந்­தது என்­ப­தற்கு இது­வும் ஒரு சாட்­சி­யா­கும்.

பன்­னாட்டு நிபு­ணர்­கள் ஆய்வு செய்து உண்­மை­யைக் கூறு­வ­தன் மூலமே போர்க் காலத்­தி­லும் அதற்கு முன்­ன­ரும் இலங்கை இரா­ணு­வத்­தி­னர் எந்­த­ள­வுக்கு போர்க்­குற்­றத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­பதை நிரூ­பிக்க முடி­யும். எனவே இதனை நாம் முறை­யாக அணுக வேண்­டும் என்­றார்.

Leave a comment