செம்­ம­ணி மனித எலும்­புக்­கூடு காணப்­ப­டும் இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இன்று தொடங்­கும்!

333 0

யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தென்­பட்ட மனித எலும்­புக்­கூடு காணப்­ப­டும் இடத்­தில் அகழ்­வுப் பணி­கள் இன்று தொடங்­கும் என்று தெரி­கி­றது.

செம்­மணி வீதி­யில் நீர்த்­தாங்கி அமைக்­கும் பணிக்­காக நிலம் தோண்­டப்­பட்­ட­போது மண்டை ஓடு, மற்­றும் எழும்பு எச்­சங்­கள் இனங்­கா­ணப்­பட்­டன. சம்­ப­வம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதை­ய­டுத்து அந்த இடத்­தில் மட்­டும் கட்­டு­மா­னப் பணி நிறுத்­தப்­பட்­டது.

யாழ். நீதி­வான் மன்ற நீதி­வான் எஸ்.சதீஸ்­க­ரன் சம்­ப­வ­இ­டத்­திற்­குச் சென்று நில­மையை நேரில் ஆராய்ந்­தார். சட்ட வைத்­திய அதி­கா­ரி­யைக் கொண்டு சோத­னை­களை நடத்­து­மாறு பணித்­தார்.

சட்ட மருத்­து­வக் குழு கடந்த ஞாயிற்­றுக் கிழமை சம்­பவ இடத்­திற்கு வருகை தந்­தது. எனி­னும் பொலிஸ் உயர் அதி­காரி வருகை தராத கார­ணத்­தால் அன்­றைய தினம் அகழ்­வுப் பணி நடக்­க­வில்லை. இன்று செவ்­வாய்க் கிழமை இன்­றைய தினம் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Leave a comment