நாட்டின் முதல் குடிகள் சிங்களவர்களா? தமிழர்களா? – நிரூபிக்குமாறு சி.வி.யிடம் சவால்

348 0

இந்நாட்டில் சிங்களவர்களுக்கு முன்னர் தமிழர்கள் குடியிருந்துள்ளார்கள் என்பதை முடியுமானால் நிரூபிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கின்றேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

இந்நாட்டில் சிங்களவர்களுக்கு முன்னர் தமிழ் மக்களே குடியிருந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து இன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தை முடியுமாயின் நிரூபிக்குமாறு அவருக்கு சவால் விடுக்கின்றேன் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் கூறினார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Leave a comment