காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அகில விராஜ்

262 0

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது எனவும், ஆனால் மைதானத்தில் உள்ள பெவிலியன் மட்டுமே அகற்றப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோவின் தலைவர் ரீனா புகுவா இலங்கைக்கு வருகை தந்த போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து விவாதித்திருந்தோம், எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், பெவிலியனில் பிரச்சினை உள்ளது தொடர்பில் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது எனவும், பெவிலியன் மட்டுமே அகற்றப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a comment