காலி சர்வதேச மைதானம் அகற்றப்பட மாட்டாது-சாகல

220 0

காலி சர்வதேச மைதானம் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட மாட்டாது என்றும், எனினும் காலி சர்வதேச மைதானத்தில் உள்ள பெவிலியன் அகற்றப்படும் என்றும் திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் காலி மைதானத்தில் இனி வரும் காலங்களிலும் நடைபெறும் எனவும், காலி மாவட்டத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொக்கல பிரதேசத்தில் உள்ள ஒரு காணியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

Leave a comment