இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது

216 0

இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தர்ஹா  கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 கோடி 50 இலட்சம் மதிப்புள்ள கேரளக் கஞ்சாவை தமிழ் நாடு கீயூ பிரிவு பொலிஸார் வியாழக்கிழமை இன்று கைப்பற்றினர்.

இச்சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்பா தர்ஹா  கடற்கரைப் பகுதியிலிருந்து  இலங்கைக்கு கேரளக்  கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு பொலிஸ் அதிகாரி ராஜ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்து,

இதனையடுத்து  இராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மகேஸ்  தலைமையில்  கடற்கரை பகுதிகளில் பொலிஸார்  தீவிர சோதனை நடத்தினர்.

அதன் போது கடற்கரையில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகன், ஜெயகணேஷ், கீத்தீஸ்வரன் ஆகிய மூவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள்  இலங்கைக்கு கடத்துவதற்க்காக சீனியப்பா தர்ஹா  கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்தகவலைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியை தோண்டிய பொலிஸார் 152 கஞ்சா  பொட்டலங்களைக் கைப்பற்றினர்.கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் மொத்தமாக 304 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றைக் கைப்பற்றிய பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment