மத்தள விமான நிலையம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் இறுதிக்குள்-எரான் விக்ரமரத்ன

209 0

மத்தள விமான நிலையம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறினார்.
அத்துடன் அந்த உடன்படிக்கை 40 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 65 இலட்சம் ரூபா என்றும் செலவினம் 2900 இலட்சம் ரூபா என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமான நிலையத்தின் ஒரு தவணையை செலுத்துவதற்காக 1.7 பில்லியன் ரூபா செலவாவதாகவும், இதுபோன்ற மூன்று தவணைகள் தற்போதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து நிறுவனம் ஒன்றை அமைத்து இந்தியாவுக்கு 70 க்கு 30 வீதம் என்ற வகையில் பொறுப்பெடுப்பதாகவும், அது இலாபம் ஈட்டும் போது 30 க்கு 70 வீதம் என்ற வகையில் அமையும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறினார்.

Leave a comment