சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சட்டத்தரணி – சங்கத்திலிருந்து நீக்க முடிவு

1917 0

சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை, சங்கத்தின் அங்கத்துவத்தில் இருந்து தற்காலிகமாக நீக்க சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று மாலை ஒன்றுகூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிமன்றம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 5 சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணையின் அறிக்கை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம் கிடைக்கும் வரை சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ, சட்டத்தரணிகளின் தொழிலுக்கு பொருத்தமற்ற மற்றும் அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதால், சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment