இலஞ்சம், ஊழல் தொடர்பில் இதுவரை 1,398 முறைப்பாடுகள்

446 0

இந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1,398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றுள் 908 விசேட முறைப்பாடுகள் தொடர்பில் தற்பொழுது அதி தீவிர விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக நாடு முழுவதிலும் பரந்தளவில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது 2,768 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலேயே இவ்வருடம் இது வரையிலான காலப்பகுதிக்குள் 1,398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment