இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் புதிய சீருடை-நிமல் சிறிபால டி சில்வா

246 0

அடுத்த வருடம் முதல் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தூர சேவை பேருந்துகளின் ஆசனப்பதிவிற்காக உருவாக்கப்பட்ட இணையதள ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று (16) போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

அதனடிப்படையில் இனிமேல் sltb.express.lk என்ற இணையதளத்தின் ஊடாக தூர சேவை பேருந்துகளின் ஆசனப்பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment