கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை நிலவிய அதிகூடிய மழையுடனான அசாதாரண காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டுபாய் மற்றும் இந்தியா, மும்பாயிலிருந்து வந்து இன்று அதிகாலை தரையிறங்கவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய இரண்டு விமானங்களே இவ்வாறு மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்ப்டுட்டுள்ளது.
இந்த விமானங்கள் இரண்டும் காலை 7 மணிக்கு பின்னர் மத்தலை விமான நிலையத்திலிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

