அகுருவாதொட்ட, யால சந்தி, வெரவத்த பகுதியில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடம்கொட பிரதேச செயலகத்தில் கடமை புரியும் 35 வயதுடைய அபிவிருத்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அகுருவாதொட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

