அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் வரை கூட்டு அரசாங்கமே செயற்படும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

