வனஜீவராசிகள் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய வகையிலான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள சீருடை குறித்து ஊழியர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் இதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

