ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தனக்கு கிடைத்தால் கட்சியை மீண்டும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேகாலையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் சேர்ந்து கட்சியை மீண்டும் பலப்படுத்து தனக்கு திறமை இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் 16 பேரில் தயாசிறி ஜயசேகரவும் அங்கம் வகிக்கின்றார். தற்பொழுது 16 பேரிலிருந்து விலகி மீண்டும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வகித்து வருகின்றார். இவர் குறிப்பிட்ட காலப் பகுதிக்கு கட்சியின் மத்திய செயற்குழு நியமித்தது.

