ஹெரோயினுடன் ஒருவர் கைது

302 0

வௌ்ளவத்த, களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயினை எடுத்துச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது இவ்வாறு ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் இருந்து 100 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment