யுவதி தூக்கிட்டு தற்கொலை

311 0

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல சந்தி பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த யுவதி இம்முறை உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்ததுடன், காதல் தொடர்பு காரணமாக யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த யுவதி மன உளைச்சலில் இருந்துள்ள நிலையில் நேற்று இரவு வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.யுவதி தூக்கில் தொங்கியதை கண்ட வீட்டார் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் யுவதி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment