கோட்டாவை தூற்றுவதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்தான் வெல்கம- அஜித் பிரசன்ன

298 0

அரசாங்கம் கூட்டு எதிர்க் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு அதற்குள்ளேயே உள்ள குமார வெல்கம எம்.பி.யைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், இதற்கு குமார வெல்கம சிறந்த முறையில் ஒத்துழைத்து வருவதாகவும் தாயகத்துக்கான இராணுவர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் மேஜர் அஜித் பிரசன்ன குற்றம்சாட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து கூட்டு எதிர்க் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். அதனை குமார வெல்கம சிறப்பாக செய்து வருகின்றார்.

கோட்டாப ராஜபக்ஷ உள்ளுராட்சி சபைக்காவது போட்டியிட்டவர் அல்லவென குமார வெல்கம தெரிவித்துள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக்க சமையல் அறையில் இருந்தவர் அரசியலுக்குள் வந்தார். மலேசியாவின் மஹாதீர் முஹம்மத் நேரடியாகவே நாட்டின் தலைமைப் பதவியை ஏற்றார். லீ குவான் யு சிங்கப்பூரில் நேரடியாக வந்துதான் பிரதமராக அரசியலில் பங்கேற்றார்.

குமார வெல்கம சொல்வது போல படிப்படியாக பிரதேச சபையிலிருந்து நாட்டின் தலைமைக்கு வரவேண்டுமாயின் அவர் மாபெரும் திருடராகத்தான் தலைமைப் பதவிக்கு வருவார் எனவும் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

Leave a comment