முன்னறிவித்தலின்றி உடைக்கப்பட்ட வீடுகள் – 20 குடும்பங்களுக்கும் மேல் பாதிப்பு

194 0

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தெஹிவளை அத்தப்பத்து டெரஸ் வீதியில் அமைந்திருந்த குடியிருப்புத் தொகுதி மக்களை திடீரென வெளியேறுமாறு பொலிஸார் பணித்து அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டத்தையடுத்து தாம் வீதிக்கு வந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தாம் குறித்த இடத்தில் வசித்து வருவதாகவும் வாக்காளர் அட்டை, மின்சாரப்பட்டியல், நீர் கட்டணப்பட்டியல் என்பன இந்த முகவரியிலேயே காணப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இடத்துக்கான நில வாடகையும் அதன் உரிமையாளருக்குப் பாதிக்கப்பட்ட மக்களால் வழங்கப்பட்டு வந்துள்ளதுள்ளன.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகத் தனியாருக்கு சொந்தமானது எனத் தெரிவித்து இரு தரப்புக்கு இடையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திடீரென முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் தாம் நிற்கதியாகியுள்ளதாகவும் தமக்கான பிறிதொரு இடத்தைப் பெற்றுத்தருமாறும் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a comment