15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளீர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
நேற்று அனுஷ்டிக்கப்பட்ட உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டொக்டர் லெனரோல் கருக்கலைப்புக்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டார்.

