வீட்டுக்கு செல்ல நேர்ந்தாலும் ஊடகத்தில் அரசாங்கம் கை வைக்காது- நவீன்

295 0

இந்த அரசாங்கம் நாட்டில் உள்ள நீதி மன்ற சுதந்திரத்திலும், ஊடக சுதந்திரத்திலும் கைவைக்க மாட்டாது எனவும், இந்த இரண்டினாலும் அரசாங்கம் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தாலும் பரவாயில்லை எனவும்  அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமாகிய நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த இரு விடயங்களையும் மாற்றுவதை விடவும் தாம் தமது தனிப்பட்ட ஆத்ம கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு விட்டுச் செல்வது மிகவும் சிறந்தது எனவும் அவர்  மேலும் கூறினார்.

சிறிக்கொத்த தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment