இராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

293 0

இரத்மலானை – சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் மிரிஹானை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி இரத்மலானை – சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரால் கடத்திச் செல்லப்பட்ட வாகனமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment