மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கும், உதவிய தாய்க்கும் விளக்கமறியல்

2 0

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில்  தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது  மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வெல்லாவெளி கணேசபுரம் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தாய்க்கும் தெரிந்துள்ளது. இருந்தும் குறித்த தாய் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது கணவரை பாதுகாத்து வந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி வேறு கிராமத்தில் உள்ள தனது சகோதரியிடம் தனக்கு நடந்த கதியை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் சகோதரி அவர்களது வீட்டுக்கு பக்கத்திலுள்ள வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து பக்கத்து வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம்  செய்த 43 வயதுடைய தந்தையையும் உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

இதேவேளை இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Post

நலன்புரி முகாம்களில் உள்ளவர்களை குடியேற்ற காணி கொள்வனவு

Posted by - November 10, 2016 0
யாழ்ப்பாணம் நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுள் 220 குடும்பங்களுக்கு காணிகள் தேவையாக உள்ளது. அரச காணிகள் இல்லாததினால் இவர்களுக்கென தனியார் காணிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நலன்புரி…

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

Posted by - January 26, 2017 0
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக, வவுனியா உள்வட்ட வீதியில்…

“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016 0
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை…

சகல மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - August 13, 2018 0
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கக்கூடாது எனவும், சகல மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனவும்இ வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  …

பிறந்த குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Posted by - April 1, 2017 0
மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மேல்மாடித்தெருவில் கணவனும் மனைவியுமான வைத்தியர்கள் வாடகைக்கு…

Leave a comment

Your email address will not be published.