ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்

1 0

யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க கூடாது என பொது மக்கள் பல போராட்டங்கள் முன்னெடுத்த வரும் நிலையில், ஒல்லாந்த கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பில் முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் வடமாகாண ஆளுநர் தான் இந்த விடயத்தினை ஆரம்பித்து வைத்தவர். அவ்வாறு இராணுவத்திற்கு ஒல்லாந்த கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்.

வடமாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது.

ஒல்லாந்த கோட்டை தொல்பொருள் சின்னம் என்பதனால், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற பிரச்சினையும் உள்ளது.

வடமாகாண சபை சுற்றுலா மையம் ஒன்றிணை அமைக்க கோரிய போது, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், படையினர் வரும்போது, ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் புரியவில்லை.

சுற்றுலா மையம் அமைக்க கேட்ட போது அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினருக்கு ஒல்லாந்த கோட்டையை கொடுப்பது மனவருத்தத்தினை தருகின்றது.

அதேநேரம், இராணுவத்தினர் ஒல்லாந்த கோட்டையில் நிரந்தர முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Related Post

தீர்வுகள்தராத தினமேன்?

Posted by - December 11, 2017 0
தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே உனக்குத் தெரியாது உயிரடங்கும் வேதனைகள்! வேதனைகள்…

இலங்கை குறித்து பான் கீ மூன் நற்சான்றிதழ்

Posted by - September 21, 2016 0
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் தமது இறுதி…

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - September 18, 2017 0
யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று…

சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 5, 2017 0
தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் யாழ் வீரசிங்க மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு…

யாழில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - June 17, 2018 0
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியிலேயே இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மரண…

Leave a comment

Your email address will not be published.