அனுமதியின்றி முல்லைத்தீவில் மதுபான சாலை

1 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த  மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி  நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன்படுத்தபட்டது எனவும் கருத்து தெரிவிக்கபட்டது.

உடனடியாக இந்த மதுபான சாலையின் அனுமதி தொடர்பில் பரிசீலித்து  மூடுவதற்கான நடவடிக்கையினை எடுக்கும்படி இணைத் தலைவர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் தலைமை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Post

சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி

Posted by - December 26, 2017 0
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அக் கிராமக்களின்…

வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

Posted by - March 9, 2017 0
வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால் தேர்வானவர்களிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட…

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார்

Posted by - August 18, 2016 0
காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இதனைஉறுதிப்படுத்தும் வகையில் சட்ட…

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில்(காணொளி)

Posted by - August 15, 2017 0
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்திய தேசியக் கொடி ஏற்றபட்டு,…

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - May 12, 2017 0
82வது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று எண்பத்தி இரண்டாவது நாளாக…

Leave a comment

Your email address will not be published.