ஒரு தொகை தங்கங்களுடன் இந்திய பிரஜை கைது

46048 0

சட்ட விரோதமான முறையில் தங்கங்களை மறைத்து  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய  பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைகுக்கு யு.ஏ. 232 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து  வெளியேறும் போது குறித்த நபரின் பயண  பொதியில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை நகைகைளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இந்தியாவிலுள்ள கேரளா பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரிடமிருந்து சுமார்  (1,90,82,630)  ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்களை மீட்டுள்ளனர்.

சுமார் மூன்று கிலோ 13 கிராம் மதிக்கதக்க தங்க பிஸ்கட்களுடன் ஒரு தொயை தங்க நகைகளும் மறைத்து வைத்திருந்ததாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

There are 0 comments

  1. Pingback: 14 healthiest vegetables on earth — CLUB VALERI

Leave a comment