வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருட்டு

328 0

வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் பணம் திருட்டுப் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள், பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், கொமினிகேசன், ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் கூரையைப்பிரித்து உள்நுழைந்த திருடர்கள் வர்த்தக நிலையத்திலிருந்த பணத்தினை எடுத்துச் சென்றுவிட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளுக்காக குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment