உலக கோப்பை கால்பந்து அரையிறுதி – பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்

1 0

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.
ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 – 0 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Related Post

மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்க காணொளி பதிவுகள் குறித்து விசாரணை

Posted by - January 2, 2017 0
மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி பதிவுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மியன்மார் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. மியன்மார் நாட்டின் சிறுபான்மை மக்களான ரொஹிங்கிய…

தலாய்லாமாவை சந்தித்துப் பேசியது தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது

Posted by - May 11, 2017 0
அமெரிக்க பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுவினர், சமீபத்தில் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவுக்கு வந்து தலாய்லாமாவை சந்தித்துப் பேசியது தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - August 24, 2017 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நிலவும் முரண்பாட்டை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. ஜம்மு –…

விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்

Posted by - August 29, 2017 0
கனடா நாட்டின் வான்கோவர் நகரில் நடைபெற்ற சர்வதேச பேச்சுப் போட்டியில் ‘விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்’ என்ற தலைப்பில் பேசிய இந்திய வம்சாவளி நபர் தங்கப்பதக்கம் வென்றார்.

மிதக்கும் அணு மின் நிலையம் – ரஷியா உருவாக்கி சாதனை

Posted by - December 15, 2018 0
ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 

Leave a comment

Your email address will not be published.