பாகிஸ்தான் அட்டூழியம் – சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு

0 0

பாகிஸ்தானின் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை ஒரு கும்பல் கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் வசித்து வருபவர் குலாம் சிங். தியரா சாஹால் பகுதியில் காவல் துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். அவர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறார். அவருடன் மனைவி, குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் அங்கு வந்தார். உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என குலாம் சிங்கிடம் கூறியுள்ளார்.

மேலும் அவரை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினார். தனது அடியாட்களுடன் வந்த அவர் குலாம் சிங்  தலைப்பாகையை அகற்றினார். சீக்கிய மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை குலாம் சிங் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவேற்றம் அங்கு  வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து குலாம் சிங் கூறுகையில், வீட்டுக்குள் நுழைந்து எனது தலைப்பாகையை வலுக்கட்டாயமாக அகற்றினர். எனது மத உணர்வை அவர்கள் மதித்ததாகவே தெரியவில்லை. பாகிஸ்தானில் சீக்கியர்களை எப்படி மதிக்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என பதிவிட்டுள்ளார்.

Related Post

மாலத்தீவு: அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் நஷீத் முடிவு

Posted by - February 3, 2018 0
அரசியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை ஆன நிலையில், வரும் அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ளதாக மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நசீத் கொழும்புவில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது திருமணம் செய்தார் இம்ரான் கான்!

Posted by - February 19, 2018 0
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஆன்மீக ஆலோசகரை திருமணம் செய்துள்ளார். இதன்மூலம் கடந்த சில தினங்களாக வெளியாக தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஈராக்: கண்ணிவெடி தாக்குதலில் காயமடைந்த பெண் பத்திரிகையாளர் உயிரிழந்தார்

Posted by - June 25, 2017 0
ஈராக்கின் மோசூல் நகரில் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒரு பிரான்ஸ் நாட்டு பெண் பத்திரிகையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈராக்கின் வரலாற்று சிறப்பு மிக்க மோசூல்…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்

Posted by - April 25, 2018 0
சிங்கப்பூரில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

ஈராக்கில் மூன்று தினங்களுக்கு துக்க தினம்

Posted by - July 4, 2016 0
ஈராக்கில் 3 தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு துக்க தினம்…

Leave a comment

Your email address will not be published.