டுவிட்டரில் பின்தொடர்பவர்களில் டிரம்ப் முதலிடம் – மோடிக்கு மூன்றாம் இடம்

2 0

சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். 

உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டு நடப்புகள் மற்றும் தன்னை பாதித்த விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கடந்த 12 மாத இடைவெளியில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விவரம் வருமாறு:
சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபருடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர்கின்றனர்.
முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
வெளியுறவு துறை மந்திரிகளிலேயே மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ் முன்ன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 குற்றச்சாட்டு

Posted by - October 20, 2018 0
ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள்…

பேர்லின் தாக்குதல் ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted by - December 21, 2016 0
ஜேர்மனியில் பேர்லின் நகரில் நேற்று இடம்பெற்ற பாரவூர்தி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைக் கோரியுள்ளனர். அங்குள்ள கிறிஸ்ட்மஸ் அங்காடி ஒன்றினுள் பாரவூர்தி ஒன்று செலுத்தப்பட்டு இந்த தாக்குதல்…

வடகொரிய விவகாரம்: ‘நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம்’ என டிரம்புக்கு சீன அதிபர் அறிவுறுத்தல்

Posted by - August 13, 2017 0
வடகொரிய விவகாரத்தில் நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நாளில் உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய மெஸ்சி, ரொனால்டோ – சோகத்தில் ரசிகர்கள்

Posted by - July 1, 2018 0
ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரபல வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.