நாமலுக்கு எதிரான வழக்கொன்று ஒத்திவைப்பு

343 0

ட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது சாட்சியாளருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து, அடுத்த விசாரணையின் போது சாட்சியாளரை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment