அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

333 0

கண்டி கலவரத்தின் பிரதான சந்தேக நபர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த நபர்களுக்கெதிரான வழக்கு இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அமித் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணை மற்றும் 5000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமித் வீரசிங்க மீது தொடுக்கப்பட்டுள்ள மேலும் சில வழக்குகளுக்கு இன்னும் பிணை வழங்கப்படவில்லை என்பதுடன் அவருக்கெதிரான பிரதான வழக்கிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியாக இனங்காணப்பட்டு அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment