மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு பழைய முறைமையே சிறந்தது எனவும், புதிய தேர்தல் முறைமையையும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கையையும் தாம் முற்றாக புறக்கணிக்கின்றோம் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாகிய ரிஷாட் பத்தியுத்தீன் அறிவித்துள்ளார்.
தேர்தலைப் பிற்போடுவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு பொருத்தமில்லாத ஒரு செயல் எனவும் நேற்று (06) பாராளுமன்ற விவாதத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

