தமிழகம் சுகாதார சுற்றுலா மாநிலமாக மாறி வருகிறது – வெங்கையா நாயுடு

327 0

தமிழகம் சுகாதாரத்தில் சுற்றுலா மாநிலமாக விரைவாக மாறி வருவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான நல திட்டங்களை தொடங்கி வைத்து மாணவர்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.

இந்நிலையில் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கண் அறுவை சிகிச்சை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய வெங்கையா நாயுடு, ‘தமிழ் நாடு சுகாதார துறையில் சுற்றுலா மாநிலமாக விரைவாக மாறி வருகிறது. தமிழ் மொழியும், தமிழ்நாடும் மிகப்பெரிய மதிப்பிற்குரியதும், போற்றக்கூடியதும் ஆகும்.

மேலும், குழந்தைகள் வீடியோ கேமை தொடர்ந்து விளையாடி வருவதால் அவர்களின் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. எனவே, அதிக நேரம் குழந்தைகள் வீடியோ கேம் விளையடுவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.

Leave a comment