தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்

6634 0

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தங்கள் பகுதியில் இருக்கும் அரசு இ.சேவை மையங்களிலோ அல்லது வீடுகளில் இருந்தபடியே கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மாநகராட்சி பகுதிகளில் பிறப்பு, இறப்பு தகவல்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்து சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில் பஞ்சாயத்துகளில் பதிவு செய்து, பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்த சான்றிதழ்களை பெறும் நிலை தொடர்கிறது. தற்போது மாநிலம் முழுவதும் ஆன்-லைனில் சான்றிதழ்களை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக பொது மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அதில் கையில் எழுதப்பட்ட சான்றிதழையோ அல்லது அரசால் வரையறுக்கப்பட்ட மென்பொருளை தவிர்த்து வேறு வகையான மென் பொருளிலோ சான்றிதழ்கள் வழங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைவருக்கும் பொதுவாக மென் பொருள் வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பை கண்காணிக்க பயன் படுத்தப்படும் மென்பொருள் புதிய மென் பொருளுடன் இணைக்கப்படும்.

எனவே பொது சுகாதாரத்துறையும் பதிவாளர் அலுவலகம் போல் செயல்படும்.

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தங்கள் பகுதியில் இருக்கும் அரசு இ.சேவை மையங்களிலோ அல்லது வீடுகளில் இருந்தபடியே கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு மட்டுமே சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வேறு மென்பொருள்கள் வழியாகவும் சான்றிதழ்களை வழங்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a comment