ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில். இன்று காலை நடைபெற்ற நேர்காணல் நிகழ்சியில் தெரிவிப்பு
கேள்வி- ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டு உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது அவுட்ஸ்பீக்கரில் ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பது தெரியுமா?
அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் தொலைக்காட்சிக்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவர அவசரம் இல்லை
அவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன் அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியை அவட்ஸ்பீக்கரில் வைத்து கதைப்பது தெரியாது
அவர் வைத்த பின் எனக்கு வந்த அழைப்பின் ஊடாகவே கேட்டறிந்தேன். பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறல்.
இவர் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது
இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க இயலும்
பாராளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க முற்றுமுழுதாக நூற்றுக்கு 52 வீதமாக பெண்கள் வாழுகின்ற இடத்திலேயே துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே நான்உண்மையில் வெளியில் கொண்டுவரவிரும்புகின்றேன்.
இதற்கான நடவடிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் அதேவேளை, கணவனை இழந்து தனிய வாழ்ந்து கொண்டிருக்கும் வேளைகளில் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாககத்தான் அது இருக்கின்றது. அதை நான் உரிய இடங்களுக்கு நான் சமர்ப்பிப்பேன்
என குறித்த தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார்

