வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன்- விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்

548 0

வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன் என்று சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். அதில் உள்­ள­தா­வது-

யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­க­ளும் குற்­றச் செயல்­க­ளும் அதி­க­ரித்­துள்­ளன. ஆறு வய­துச் சிறுமி படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். 59 வய­தான வயோ­தி­பப் பெண் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன் வீட்­டில் கொள்­ளை­யும் இடம்­பெற்­றுள்­ளது.வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலை­யில் மக்­க­ளின் துன்­பங்­க­ளைத் தாங்­க­மு­டி­யாது புலி­க­ளின் காலத்தை நினை­வூட்ட வேண்­டிய நிலமை ஏற்­பட்­டது.

மக்­க­ளின் துன்­பங்­களை வெளிக்­கொ­ணர வேண்­டி­யது அவர்­க­ளது பிர­தி­நி­தி­யான எனது கட­மை­யா­கும். இத­னால்­தான் மக்­க­ளின் துன்­பங்­களை வெளிக்­கொண்டு வரும் வகை­யில் எனது கருத்தைத் தெரி­வித்­தி­ருந்­தேன். இந்­தக் கருத்து தென்­ப­கு­தி­யில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­மை­யால் இந்த வி­ட­யம் தொடர்­பில் கட்­சித்­த­லை­மைக்கு விளக்­கம் அளித்­துள்­ளேன்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தலைமை அமைச்­ச­ரும் கட்­சித் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, யாழ்ப்­பா­ணத்­தில் தங்­கி­யி­ருந்­த­போது என்­னு­டன் தொடர்­பு­கொண்டு எனது கருத்­துக் குறித்து கலந்­து­ரை­யா­டி­னார்.

 இதன்­போது எனது நிலைப்­பாட்­டினை அவ­ருக்கு விளக்­கிக் கூறி­னேன். எனது கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யால் வேண்­டு­மா­னால் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நான் தயா­ரா­க­வுள்­ள­தாக நான் எடுத்­துக்­கூ­றி­னேன். ஆனால் அதனை அவர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

இதன் பின்­னர் கொழும்பு திரும்­பிய நான் புதன்­கி­ழமை மாலை தலைமை அமைச்சரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­து­டன் வடக்­கில் குறிப்­பாக குடா­நாட்­டில் இடம்­பெற்று வரும் போதைப்­பொ­ருள் பாவனை, வன்­மு­றை­கள், படு­கொ­லை­கள் தொடர்­பில் எடுத்­துக்­கூ­றி­ய­து­டன் மக்­க­ளின் துன்­பங்­க­ளைப் பொறுக்க முடி­யா­மை­யால் தான் நான் உரை­யாற்­றி­ய­தாக விளக்­க­ ம­ளித்­தேன்.

தற்­போது எனது உரை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யால் கட்­சி­யின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும் வகை­யில் தற்­கா­லி­க­மாக அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நான் தயார் என்று எடுத்­துக் கூறி­னேன். அதற்­கி­ணங்­கவே நான் எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன்.

எனது மக்­க­ளுக்­காக குரல் எழுப்­பி­யமை தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பி­லான எத்­த­கைய விசா­ர­ணை­க­ளை­யும் எதிர்­கொள்­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்­றேன். வடக்கு மக்­கள் எம்மை தமது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கா­க­வும் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­க­வுமே தெரி­வு­செய்­துள்­ள­னர்.

அவர்­கள் துன்­பப்­ப­டு­ம்போது நாம் பேசா­தி­ருக்க முடி­யாது. மக்­க­ளுக்­காக அமைச்­சுப் பத­வியை துறந்­தமை தொடர்­பில் நான் பெருமை கொள்­கின்­றேன் -– என்­றுள்­ளது.

Leave a comment