அகில இலங்கை தமிழ் மொழித் தின 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சிலும், எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினால் நிகழ்ச்சி தொடர்பான கடிதங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சு பாடசாலை அதிபர்களைக் கோரியுள்ளது.

