ஏறாவூர் கொரகல்லிமடு வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தி பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய ஓபநாயக மிதல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

