கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வள்ளபட்டைகளை கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் நேற்று (05) காலை 9.40 மணியளவில் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களிடம் இருந்து 51 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பெறுமதியான 61.8 கிலோ எடையுடைய வள்ளபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், நேற்று (05) காலை 10 மணியளவில் இவர் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரிடம் இருந்து 20 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 20.75 கிலோ எடையுடைய வள்ளபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

