கல்வித் துறையில் 12000 பேர் பழிவாங்கப்பட்டுள்ளனர் – அகிலாவிராஜ்

194 0

கல்வித்துறையில், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு, சில நடமுறைகளின் கீழேயே, நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், “இத்துறையில் சுமார் 12 ஆயிரம் பேர், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில், 1,018 பேருக்குத் தரமுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கிடைத்துள்ளது” என்றார்.

தகுதியற்றவர்களுக்கு தரமுயர்வுகள் வழங்கப்படவில்லை. இது குறித்து ஏதாவது பிரச்சினைகள் காணப்படின், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென அதிபர், ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது, பார்வையாளர் கலரியில், பாடசாலை மாணவர்கள் நிறைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment