விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதே தமது இலக்கு என்று தெரிவித்தமை பொறுப்பற்ற செயல் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தாம் எந்த இடத்தில் தவறி இருக்கிறேன் என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், தமது முடிவுக்கு அமைய அரசாங்கம் தம்மை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

