என்னை யார் யாரே
தீர்மானிக்க
முயற்சிக்கிறனர்
தூங்குவதை
எழுதுவதை
பயணிப்பதை
சில சமயங்களில்
உண்பதைக் கூட
மரணங்களோடு நான்
விளையாடுவதாய்
கோபங்கொள்ளும் சிலர்…
என் எழுத்துக்களுக்கான
வெகுமதிகளை
கேலி செய்யும் சிலர்…
பிறர் காலில் விழுந்து
(அரச) நியமனம் பெறமுடியாத
கோழை என வேறு சிலர்…
என்னை மரணம் நோக்கி
துரத்துகிறனர்
மரணம் கூட என்னைத்
தழுவிக்கொள்ள அஞ்சுகிறது
இவர்களை மீற முடியாத
கோழை என்று
என் மரணங்களையும்
யார் யாரே தானே
தீர்மானிக்க முயல்கிறனர்
அ.யசீகரன்

