சிறுத்தை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை

353 0

கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை ஒன்றைத் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும், இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

Leave a comment