போதை பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது

203 0

கல்கிஸ்ஸ, றத்மலானை, பங்களா வீதி பிரதேசத்தில் ஹெரோய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை, வலான மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 06 கிராமும் 540 மில்லிகிராம் ஹெரோய்ன், கஞ்சா அடங்கிய பீடி 07 உம், பெயர் தெரியாத 57 போதை மாத்திரைகளும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

21 மற்றும் 26 வயதுடைய றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment