எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் மத்தியில் தேவையில்லா பிரச்சனை ஒன்றை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், பௌஸர்கள் மூலம் அவசியமான எரிபொருள் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

